பலூனாக உயரப் பறக்குமா யுவன் சாம்ராஜ்யம்?

வியாழன், 28 ஜூலை 2016 (17:53 IST)
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. அவர் இசையமைக்கும் படங்களில் நாலில் மூன்று பாடல்கள் தேறும் என்ற நம்பிக்கையும் இருந்தது.



இது ஒரு கணக்குக்குதான். பெரும்பாலான படங்களில் அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்.
 
அடுத்தடுத்த திருமண முறிவுகள், நட்புகளுடன் விரிசல் என்று யுவனின் வாழ்க்கையில் கடந்து சென்ற புயல்கள் அவரது இசை சாம்ராஜ்யத்தையும் அசைத்தது. யுவன் பாடலா என்று கேட்கும் அளவுக்குதான் இருந்தன சமீபத்திய அவரது பாடல்கள்.
 
இப்போது மீண்டும் சமநிலைக்கு வந்துள்ளார். யுவனுக்கு மகள் பிறந்து ஒரு முழுமையான மனிதனாகியிருக்கிறார். 
 
அது பாடல்களிலும் பிரதிபலிக்கிறது. மீண்டும் படங்களில் பிஸியாகி வருகிறார் யுவன். அதில் ஒன்று, ஜெய் - அஞ்சலி நடிக்கும் பலூன். அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்தப் படத்தில் மெலோடி பாடல்கள் நிரம்பியுள்ளனவாம். 
 
பலூன் யுவனின் புகழை மீண்டும் உயர பறக்க செய்யட்டும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்