சினிமா தயாரிப்பில் ஈடுபடவுள்ள ஆர்யன் கான் !

சனி, 18 டிசம்பர் 2021 (22:56 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் தன் தந்தையுடன் இணைந்து  படத் தயாரிப்பு குறித்து கற்றுக்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த அக்டோபர் மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்து  தற்போது ஜாமீன் வெளியே வந்துள்ள ஷாருக்கானின்  மகன்  ஆர்யன் கான் தந்தையுடன் இணைந்து படத் தயாரிப்பு பணிகளை கற்றுக்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்து அன்றாட அலுவல்கள் செய்ய ஆர்ம்பித்துள்ள ஆர்யன் கானுகு போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது.

வெளிநாடு சென்று சினிமா பற்றி கற்றுக் கொள்ள முடிவெடுத்திருந்த  ஆர்ய ந் கானின் பாஸ்போர்ட்டை உயர்நீதிமன்றம் ஒப்படைக்கும்படி கூறியதால் வெளிய்நாடு செல்லமுடியாது என்பதால் உள்நாட்டிலேயே சினிமா தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட வைக்க ஷாருக்கான் முயற்சித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்