சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஹாட்ரிக் ஹிட் தந்திருந்த போதும் அழகுராஜா என்ற ஒரேயொரு தோல்வி இயக்குனர் ராஜேஷை கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது. ஜீவா, ஆர்யா என்று அவர் ஹிட் தந்த நடிகர்களிடம்தான் அவரால் அடுத்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்க முடிந்தது. ஆர்யாதான் எப்போதும் டேக்இட் ஈஸி ஆளாச்சே.