ஆர்யாவின் சைக்கிள் பயணம்

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (15:42 IST)
எரிபொருள் சிக்கனத்துக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் உலகம் எங்கும் பெரும்பாலான மக்கள் சைக்கிள் பயணத்துக்கு மாறி வருகிறார்கள். இந்தியர்கள் இப்போதுதான் ஆவேசத்துடன் கார் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு முன்னணி நடிகர் தனது பயணத்துக்கு சைக்கிளை பயன்படுத்துவது ஆச்சரியம்தானே.
 
அந்த நடிகர் ஆர்யா என்பது உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்கும்.
 
மீகாமன் படப்பிடிப்பு சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்த போது சைக்கிளில்தான் படப்பிடிப்புக்கு வந்து சென்றார் ஆர்யா. உடம்பை பிட்டாக வைக்கதான் இந்த சைக்கிள் சவாரி. மீகாமனுக்கு முன்பு, ஆரம்பம் படத்தின் போது பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு சைக்கிளில் வந்துள்ளார். ஆறு மணி நேரம் பிடித்த அந்த பயணம் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று தெரிவித்தவர், தனது சைக்கிள் பயணத்தை யட்சன் படத்திலும் தொடர்கிறார்.
 
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் இதன் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடில் நடந்து வருகிறது. இங்கும் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார் ஆர்யா.
 
ஆர்யாவைப் பார்த்து அரைடஜன் பேர் சைக்கிளுக்கு மாறினாலும் ஆரோக்கியமான மாற்றம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்