மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் பியக்குனர் என ரசிகர்கள் மத்தியில் பெயரெடுத்தவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி .ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. ஜெயலிதாவாக நடித்திருந்த கங்கனாவை ட்ரோல் செய்து கலாய்த்து விட்டனர் நெட்டிசன்ஸ் . இதானால் படக்குழு மிகுந்த கவனத்துடன் படத்தை இயக்கி வந்த நிலையில் ஜனவரி 17-ம் தேதியான இன்று எம்.ஜி.ஆர் பிறந்த தினம் என்பதால் சற்றுமுன் இப்படத்தின் இரண்டாம் லுக் டீசர் இணையத்தில் வெளிவந்து அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு அரவிந்த் ஸ்வாமியின் நடிப்பு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.