அரசியல் கதையில் அருள்நிதி

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (18:22 IST)
சமீபத்தில் சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளச்சேதம் நீங்காத வடுக்களை வழங்கியிருக்கிறது. குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசித்துவந்த மக்களுக்கு.


 
 
தலைமுறை தலைமுறையாக ஆற்றங்கரையில் வசித்துவந்த குடும்பங்கள் நகரத்தின் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதன் உடனடி பாதிப்பை எதிர்கொள்கிறவர்கள் குழந்தைகள். நண்பர்கள், விளையாடும் இடம் முதற்கொணடு படித்துவரும் பள்ளியையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள். பெரியவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் வேறுவகை.
 
இதனை மையப்படுத்தி தனது அடுத்தப் படத்தை அமைத்துள்ளார் வசந்தபாலன்.
 
என்னதான் சமூகப் பிரச்சனையைச் சொல்லும் படமாக இருந்தாலும், விற்பனை சாத்தியமுள்ள நாயகன் - குறைந்தபட்சம் முகப்பரிட்சயம் உள்ளவர் தேவை. அதன் காரணமாக அருள்நிதியை இதில் நடிக்க வைக்க உள்ளார்.
 
விதவிதமான கதைகளை தேடி ஒப்புக் கொள்ளும் அருள்நிதிக்கு இப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்