பஜ்ரங்கி பைஜான் ஸ்டைலில் தயாராகும் அர்ஜுன், ராய் லட்சுமி படம்

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (14:29 IST)
பாகிஸ்தான் சிறுமியை இந்தியரான சல்மான் பத்திரமாக வீட்டில் சேர்ப்பதுதான் பஜ்ரங்கி பைஜான். இதே சாயலில் அமைந்த படத்தில் அர்ஜுன், ராய் லட்சுமி நடித்து வருகின்றனர்.
அர்ஜுன் ஹைதராபாத்தைச் சேர்ந்த தமிழர். அவர் இலங்கை பெண்ணான ராய் லட்சுமியை பத்திரமாக இலங்கைக்கு கொண்டு சேர்ப்பதுதான் படத்தின் கதை. ராணி ராணம்மா என்று இந்தப் படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
 
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்