அடுத்த மாதம் அடுத்த படம் - தொடர் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (11:33 IST)
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்... அர்ஜுன் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் 2 படத்தின் மையக்கருத்து இது. படம் பார்த்தவர்கள் தொடர்ந்து பாராட்டுகிறார்கள். படம் வெற்றி பெற்றதால் பட்ட கஷ்டமெல்லாம் போயே போச்சு என அயோடக்ஸ் விளம்பரம் போல் குதூகலிக்கிறார் அர்ஜுன்.
 
பட், பாக்ஸ் ஆபிஸில் படம் தடவிக் கொண்டுதான் இருக்கிறது. தயாரித்தவர் அவர். அவரே வெற்றி எனும்போது கணக்குப் பார்க்க நாம் யார்?
 
கல்வி கொள்ளை என்ற வெயிட்டான சப்ஜெக்ட் என்பதால் பலரும் அர்ஜுனை பாராட்டுகிறார்களாம். அதனால் அடுத்த மாதமே இதேபோலொரு வெயிட்டான கதையுடன் இன்னொரு படத்தை தொடங்கயிருக்கிறாராம்.
 
ஏன் இந்த தொடர் ரிஸ்க் என்றால்... பணம் மட்டுமே நிம்மதி தராது, சமூகத்துக்கு நல்லது சொல்ல வேண்டும் என்ற நீண்டநாள் எண்ணத்தை செயல்படுத்த போகிறேன் என்கிறார்.
 
அரசியல் கட்சிகள் ப்ளீஸ்... இந்த தேசபக்தரையும் கொஞ்சம் கவனிங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்