அரண்மனையின் அக்கட பேரு சந்திரகலா

ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (12:51 IST)
சந்திரமுகி எபெக்ட் இன்னும் தீரவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வெளியான படத்தின் பெயர், சந்திரகலா.
சுந்தர் சி. நடிக்க வரும்முன் அவருக்கு மினிமம் கியாரண்டி இயக்குனர் என்ற பெயர் உண்டு. அவர் எந்தப் படம் எடுத்தாலும் முதலுக்கு மோசமாவதில்லை. அரண்மனை படமும் அப்படியே. 
 
ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், சுந்தர் சி. நடித்த இந்த பேய் படம் 2014 -இல் லாபம் சம்பாதித்த சொற்ப படங்களுள் ஒன்று. போட்ட பணத்தைவிட பல மடங்கு வசூலித்தது.
 
அரண்மனையை சந்திரகலா என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து கடந்த 19 -ஆம் தேதி வெளியிட்டனர். படம் அங்கேயும் ஹிட்டாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்