ரஜினிக்காக காம்பரமைஸ் செய்து தன் அடையாளத்தை கெடுத்துக்கொண்டார் முருகதாஸ்!

வியாழன், 9 ஜனவரி 2020 (17:01 IST)
தமிழ் சினிமாவில் நல்லதொரு கருத்தியலோடு  நாள்தோறும் சமூகத்தில் நடக்கும் பிரச்சினையை  சிந்திக்கும் வகையில்  திரைகதை அமைத்து படம் இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர்  ஏ. ஆர் முருகதாஸ். கூடவே உச்ச நட்சத்திரத்தை நடிக்கவைத்து வெகுஜன மக்களிடம் இருந்து பாராட்டை சம்பாதித்தாலும் அதற்கு ஈடாக சர்ச்சைகளிலும் சிக்கி படம் ஓஹோன்னு ஓடி ஓடி பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும். 
 
அந்தவகையில் அவரது இயக்கத்தில் வெளிவந்த கஜினி , 7ம் அறிவு , கத்தி , துப்பாக்கி , சர்க்கார் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட் அவருக்கென தனி அங்கீரத்தை ஏற்படுத்தி தந்தது. இப்படி தந்து ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையை உள்ளடக்கி மக்களை சிந்திக்க வைத்து சாதனை புரிவார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த சர்க்கார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கப்போகிறார் என்ற என்ற தகவல் வெளிவந்த உடனே ரசிகர்கள் ஆளாளுக்கு தங்களது மனதில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டனர். 
 
ஆனால், சிறந்த இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியை திரையில் புது பொக்கிஷமாய் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை...படத்தில் அழுத்தமான கதை இல்லை...என்று ஆளாளுக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டனர். என்னதான் ரஜினியை ஸ்மார்ட்டாக உருமாற்றி மேக்கப் போட்டு இளமையானவர் போல் நடனமாட வைத்திருந்தாலும் அவரது  நிஜ வயது திரையில் நன்றாக தெரிகிறது. அதற்கு ஏன் இவ்வளவு மென கெடவேண்டும்...? சர்க்கார் கதையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பயந்து தர்பாரில் சேஃபாக கதையே வைக்கவில்லை என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். முருகதாஸிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதையில் காம்பிரமைஸ் செய்யாமல் இருப்பது தான். ஆனால், அவரோ ரஜினியை பார்த்து பிரம்மித்து போய் கதையில் கோட்டைவிட்டு தனது அடையாளத்தையே இழந்துவிட்டு நிற்கிறார். இனிமேலாவது நீங்கள் நீங்களாகவே இருந்து உங்கள் அடையாளத்தை காப்பாற்றுங்ககள் ஏ.ஆர் சார்...! 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்