ஒரே மேடையில் தோன்றும் தனுஷ், சிவகார்த்திகேயன்

திங்கள், 18 ஜூலை 2016 (17:41 IST)
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் தனுஷும், சிவகார்த்திகேயனும் ஒரே மேடையில் தோன்றவிருக்கிறார்கள்.


 
 
கே.எஸ்.ரவிக்குமார் தமிழ், கன்னடத்தில் சுதீப்பை வைத்து இயக்கியிருக்கும் படம், முடிஞ்சா இவன புடி. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா வரும் 20 -ஆம் தேதி நடிக்கிறது. விழாவில் கமல் கலந்து கொண்டு முதல் பாடல் சிடியை வெளியிடுவதாக இருந்தது.
 
கமல் எதிர்பாராமல் விபத்தில் சிக்கிக் கொண்டதால் அவருக்குப் பதில் விஜய் சேதுபதி முதல் சிடியை வெளியிட, சிவகார்த்திகேயன் பெற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சி தனுஷ் முன்னிலையில் நடைபெற உள்ளது.
 
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் தனுஷும், சிவகார்த்திகேயனும் ஒரே மேடையில் தோன்றவிருப்பதால், இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தனிக்கவனம் கிடைத்திருக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்