தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை தமிழ் திரைப்படமாக எடுக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை சந்தானம் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இய்க்கவுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்காக சில்க் போன்ற கண்கள் மற்றும் முக அமைப்புக் கொண்ட நாயகியை தேடும் பணி நடந்து வந்த நிலையில் இப்போது தெலுங்கு நடிகையான அனுசுயா பரத்வாஜை படக்குழு தேர்வு செய்துள்ளனர். இவர் பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சில்க் ஸ்மிதா பிறந்த ஆந்திராவில் இருந்தே அவர் படத்தின் கதாநாயகியையும் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.