சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் கதாநாயகி ஆகும் அனுஷ்கா!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (06:59 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

சமீபத்தில் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தின் ப்ரமோஷன்கள் எதிலும் அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அனுஷ்கா அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் அவரின் 157 ஆவது படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இயக்குனர் வசிஷ்டா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்