அஜீத் வழியில் அனுஷ்கா, வேலைக்காரர்களுக்கு வீடுகட்டி தருகிறார்

புதன், 28 ஜனவரி 2015 (09:03 IST)
அஜீத் தனது வீட்டில் பணிபுரிகிறவர்களுக்கு வீடு கட்டி தந்தார். அதேபோல் நடிகை அனுஷ்காவும் தனது வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருகிறார்.
ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் அவர் தன்னிடம் பணிபுரிகிறவர்களுக்காக வீடுகட்டி வருவதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. யோகா டீச்சராக இருந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுஷ்கா. தனது வளர்ச்சிக்கு தான் மட்டுமே காரணமில்லை, தனக்காக உழைப்பவர்களும்தான் என்று அவர் கருதுவதால்தான் இந்த வீடு கட்டும் திட்டத்தில் இறங்கியுள்ளாராம்.
 
வாழ்த்த வேண்டிய விஷயம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்