பாலிவுட்டில் நடிக்கிறார் அனுஷ்கா

சனி, 27 மே 2017 (15:02 IST)
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஹிந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார்.


 

அனுஷ்கா சினிமாவில் நடிக்கவந்து 13 வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால், தெலுங்கு மற்றும் தமிழைத் தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை. அவ்வளவு ஏன், தான் பிறந்து, வளர்ந்த கன்னடத்தில் கூட நடிக்கவில்லை அனுஷ்கா.

ஆனால், ‘பாகுபலி’யின் வெற்றி, அனுஷ்காவை யோசிக்க வைத்திருக்கிறது. எனவே, பாலிவுட்டில் நடிக்க முடிவு செய்துள்ளார் அனுஷ்கா. இதனால், பலரிடம் கதைகேட்டு வந்தவர், நிவாஸ் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியிருக்கிறார். ‘ஜுவிநிலே’ படத்துக்காக விரைவில் ஹிந்தி பேசவிருக்கிறார் அனுஷ்கா.
 

வெப்துனியாவைப் படிக்கவும்