இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், தமிழ் உணர்வாளர்கள் பலர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் ஒரு கணக்கில் விஜய் சேதுபதி மகள் குறித்து ஆசாமி ஒருவர் அவதூறாக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ட்விட்டர் கணக்கு இலங்கையிலிருந்து செயல்பட்டதை கண்டறிந்து ஆசாமியை பிடித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதில் “இனி என் வாழ்நாளில் இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன். தங்கை குறித்த என் தவறான ட்வீட்டிற்கு மன்னித்து விடுங்கள் விஜய் சேதுபதி அண்ணா” என தெரிவித்துள்ளார்.