வராறு தலைவரு.. மாஸா.. கெத்தா.. – அண்ணாத்த மோஷன் போஸ்டர் ப்ரோமோ

வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (15:11 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இடையிடையே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் ஒருவழியாக படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக மோஷன் போஸ்டர் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

#Annaatthe varaaru mass-ah, gethu-ah. #AnnaattheMotionPoster in 3 hours!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali pic.twitter.com/dN2Olb3Fjh

— Sun Pictures (@sunpictures) September 10, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்