ஆனந்தத்தில் அஞ்சலி மேனன்

செவ்வாய், 30 ஜூன் 2015 (14:35 IST)
அஞ்சலி மேனன் இயக்கிய இரண்டாவது படம், பெங்களூர் டேய்ஸ். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. பிற மொழிகளில் படத்தை ரீமேக் செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். இது அஞ்சலி மேனனுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஃபிலிம்பேர் விருது விழாவில், அஞ்சலி மேனன் சிறந்த மலையாளப்பட இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், என்னுடைய படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்வது ஆனந்தத்தை தருகிறது என்றார்.
 
அன்வர் ரஷித்தின் உஸ்தாத் ஹோட்டல் படத்தின் ஸ்கிரிப்டை எழுதிய அஞ்சலி மேனன் மஞ்சாடிக்குரு, பெங்களூர் டேய்ஸ் என இரு படங்களை இயக்கியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்