கணவரை விவாகரத்து செய்யப்போகும் அனிதா சம்பத் - இது நம்ம லிஸ்ட்லே இல்லையே!

திங்கள், 12 ஜூலை 2021 (18:44 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் 4ல் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். 

இந்நிலையில் அனிதா சம்பத் கணவர் பிரபாவை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அதிர்ச்சையான செய்தியை கேட்டு கூலாக விளக்கம் அளித்துள்ள அனிதா, " இது எப்போ? கன்டென்ட் எதுவும் இல்லனு இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்களா? டெய்லி யூடியூப்ல என் புருஷனோட vlog போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல என நகைப்புடன் விளக்கியுள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்