முறியும் நிலையில் ரம்யாவின் திருமண உறவு

சனி, 2 மே 2015 (09:20 IST)
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யாவின் திருமண உறவு முறியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வருடம்தான் ரம்யாவுக்கும், அபராஜித் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடம் முழுதாய் முடிவதற்குள் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது பிரியும் நிலையில் உள்ளனர்.
 
இவர்கள் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இருவீட்டாரும் ஈடுபட்டுள்ளனர். இருவரின் பொதுவான நண்பர்களும் இவர்களை இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார்கள்.
 
உறவு முறியுமா இல்லை மீண்டும் ஒட்ட வைக்கப்படுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்