ரொமான்டிக் காமெடிப் படமான இதனை ஓடம்.இளவரசு இயக்கி வருகிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, ப்ரணீத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். ஆனந்தியும் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது.
இந்நிலையில், படத்திலிருந்து அவர் திடீரென விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகியதாக கூறப்பட்டாலும் பல நாயகிகள் நடிக்கும் படம் என்பதால் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்காது என்று அவர் படத்திலிருந்து விலகியதாக ஸ்டுடியோ வட்டாரம் கிசுகிசுக்கிறது.