அமிதாப், பர்கன் அக்தர், ஜான் ஆபிரஹாம்... வெயிட்டாக களமிறங்கும் பிஜோய் நம்பியார்

புதன், 27 மே 2015 (19:20 IST)
முதல் படம் சைத்தான் பிஜோய் நம்பியாரை திரும்பிப் பார்க்க வைத்தது. இரண்டாவது படம் டேவிட்.

இந்தியிலும், தமிழிலும் இயக்கினார். இந்தியில் பரவாயில்லாமல் போனது. தமிழில் டேவிட்டின் ஜானரை புரிந்து கொள்ளவே ஆளில்லை. விக்ரம், ஜீவா நடித்திருந்தும் படம் ப்ளாப்.
 

 
பிஜோயின் மூன்றாவது படம், வாஸிர். பர்கன் அக்தர், அமிதாப்பச்சன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது புதிதாக ஜான் ஆபிரஹாம், நீல் நிதின் முகேஷ் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த இருவருக்குமே படத்தில் சிறப்புத் தோற்றம்தான்.
 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்