அஜ்மல் நடிக்கும் மெல்ல திறந்தது மனசு

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (20:54 IST)
கோ படத்துக்குப் பிறகு அஜ்மலை ஆளையே காணோம். சொந்த மாநிலம் கேரளாவிலும் நிலைமை ஜிந்தாபாத்தான்.


 

இந்நிலையில் வளமான ஒரு வாய்ப்பு அஜ்மலுக்கு. ஒன்றல்ல மூன்று மொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்கிறார்.
 
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும், மெல்ல திறந்தது மனசு படத்தில் அஜ்மல் ஹீரோ. அசமந்து இளைஞரான இவரை ஒரு பெண் காதலிப்பதுதான் கதையாம். இனிக்க இனிக்க காதலும் சிரிக்க சிரிக்க காமெடியும் கலந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். 
 
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தைதான் மலைபோல் நம்பியிருக்கிறார் அஜ்மல்.
 
நம்பிக்கை வெல்லட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்