நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே என்ற இரண்டு படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். இவர் நடிகர் அஜித்தை பற்றி கூறும்போது, அஜித் தனது சொந்தக்காலில் நின்று திரைத்துறையில் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
அஜித் விளம்பரம் செய்யாமல் உதவி செய்யும் குணம் கொண்டவர். அஜித்துக்கு ஒருவரை பிடித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பார். அஜித்தின் ஜாதகப்படி அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார். அவர் தற்போது சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அவர்தான் சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்புவார் என தெரிவித்தார்.