தமிழ்ப் படங்களுக்கு இந்தி வில்லன்களை இறக்குமதி செய்து வந்தனர். அது போரடித்து போய், 2.0 படத்தில் இந்தியின் முன்னணி நாயகன் அக்ஷய் குமாரை வில்லனாக்கினர். இப்போது அஜித் படத்தில் வில்லனாக நடிக்க இந்தியின் இன்னொரு நாயகனான விவேக் ஓபராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.