இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், அப்புக்குட்டி நடித்துவரும் விவேகம் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தாயரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஆனால், அன்று வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி விவேகம் டீஸர் வெளியாகும் என ட்விட்டரில் படத்தின் இயக்குநர் சிவா கூறியிருந்தார். அதன்படி இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு விவேகம் டீஸர் வெளியாக உள்ளது. 57 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீஸரில் அஜித் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் உள்ளதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.