நாடு முழுவதும் பணத்தட்டுபாடு சூழல் நிலவி வருகிறது. இருந்தும் நடிகர்களின் ரசிகர்கள் ஒருவர் ஒருவரை மாற்றி மாற்றி கேலி செய்வதை மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. வீட்டில் பணம் இருக்குதோ இல்லையோ, அஜித் புகைப்படம் வெளியானவுடன், அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
நமக்கு சொந்தமான பணத்தை வங்கிகளில் மற்றும் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க பிச்சைக்காரர்கள் போல் காத்திருக்கும் சூழ்நிலையிலும் ரசிகர்கள் கேலி செய்வதையும், நடிகர்களை கடவுள் போல் கொண்டாடுவதையும் நிறுத்திக் கொள்ளவில்லை.