அட... அஜித் இன்னும் மாறவேயில்லப்பா

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:27 IST)
படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்க நேற்று வந்த சிவகார்த்திகேயனே தீயா வேலை பார்க்கிறார். ஆனால், அஜித்...?


 
 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கியுள்ளது. இதில் ரா உளவுத்துறை அதிகாரியாக அவர் நடிப்பதாக செய்தி. காஜல் அகர்வால், அக்ஷரா என்று இரு நாயகிகள். 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்புதள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இருக்கிறார் அஜித். 
 
என்னை அறிந்தால் படத்தில் கறுப்பு தலைமுடியுடன் அஜித் தோன்றினார். அதை தவிர்த்துப் பார்த்தால் கடந்த அரை டஜன் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர்தான் அவரது தோற்றம். இதிலும் அதையே தொடர்கிறார்.
 
தல... உங்களுக்கே சலிப்பா இல்ல...?

வெப்துனியாவைப் படிக்கவும்