அஜித் நடித்து வரும் 'விவேகம்' வரும் ஆகஸ்ட் மாதமும், விஜய் நடித்து வரும் 'மெர்சல்' வரும் தீபாவளி தினத்திலும் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் அஜித், விஜய் இருவரின் அடுத்த படங்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய்-முருகதாஸ் கூட்டணியும், பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டனியும் 3வது முறையாக இணைகிறது என்பது ஒரு வித்தியாசமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. யாருடைய 3வது கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்பதை பொறுத்த்ருந்து பார்ப்போம்