விஸ்வாசம் போலி வசூல் கணக்கு – கடுப்பான அஜித் …

திங்கள், 21 ஜனவரி 2019 (15:48 IST)
விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர் சார்பில் அறிவிக்கப்பட்டதை அறிந்த அஜித் அப்செட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி  பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ரிலிஸாகின. இரண்டுப் படங்களுமே மிகப்பெரிய நட்சத்திரங்களைக் கொண்டவையாக இருந்ததனால் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களை கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து ரிலிஸ் ஆகின.

படம் ரிலிஸானதில் இருந்து இரு நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் படம்தான் அதிக வசூல் செய்தது என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டனர். சில நாட்களில் ரசிகர்களின் இந்த போட்டியில் தயாரிப்பு நிறுவனங்களும் பங்கேற்க ஆரம்பித்தன. சன் பிக்சர்ஸ் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியனை வைத்து தங்கள் படமான பேட்ட யின் வசூலை உயர்த்திக் கூறி விளம்பரம் தேடிக் கொண்டது. பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடு வசூல் செய்து குறைந்த நாட்களில் 100 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என அறிவிதார்.

இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக விஸ்வாசம் படத்தின் விநியோக நிறுவனமாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் விஸ்வாசம் படம் தமிழகத்தில் 8 நாட்களிலேயே 125 கோடி  வசூலித்ததாக ஒருப் பதிவைப் பகிர்ந்தது. இதனால் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இந்த புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டி மீண்டும் சமூக வலைதளங்களில் மோத ஆரம்பித்தனர்.

ஆனால் உண்மை நிலவரமோ வேறு மாதிரியாக இருன்க்கிறது. இருப்படங்களுமே அந்த படக்குழு சொல்லும் தொகையில் பாதியை விடக் கொஞ்சமே அதிகமாக வசூலித்து இருக்கலாம் எனத் தெரிகிறது. பேட்ட படம் இதுவரை கிட்டதட்ட 60 கோடி ரூபாயும் விஸ்வாசம் படம் 70 முதல் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த பொய் வசூல் கணக்கைக் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றும் தந்திரத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அஜித் விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தரை அழைத்து ’ஏன் இது மாதிரி மிகைப்படுத்தப்பட்ட வசூல் கணக்குகளை சொல்லி வருகிறீர்கள். வராத வசூலுக்கு தயாரிப்பாளர் வட்டிக்கட்ட வேண்டிய சூழல் வந்தால் என்ன செய்வது. நீங்கள் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்றுதான் உங்களுக்குப் படத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். ஏன் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு ரசிகர்களை தவறானப் பாதையில் தள்ளுகிறீர்கள்’ எனக் கடிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்