ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

வியாழன், 2 மார்ச் 2023 (09:04 IST)
ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் மும்பையில் இந்த படத்துக்கான இசைப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மேற்கொனடனர். படத்தின் ஷூட்டிங் மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்