ஐஷ்வர்யா ராஜேஷின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய வடசென்னை!

வியாழன், 27 ஏப்ரல் 2017 (10:17 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ். இவர் இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷை வைத்து இயக்கும் வடசென்னை திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

 
ஹீரோயினாக அமலா பால் ஒப்பந்தமாகியிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஐஷ்வர்யா ராஜேஷ், கூறுகையில் இப்படத்தில் வேறுமாதிரியான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். முக்கியமாக இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் நடிப்பதின் மூலம் என் நீண்ட நாள்  கனவு நிறைவேறியுள்ளது என்றார். 
 
மேலும் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்