பாயும் புலியில் நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா

திங்கள், 30 மார்ச் 2015 (11:07 IST)
ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த பாயும் புலி படத்தின் பெயரை விஷால் நடிக்கும் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். படத்தை இயக்குவது சுசீந்திரன். இந்தப் பெயரை பயன்படுத்த ஏவிஎம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
 

 
விஷால் அண்டர்கவர் காப் ஆக நடிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயின். விஷாலின் அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். இப்போது புதிதாக தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் நகுல் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்