உடல்நலம் குன்றிய பாடலாசிரியருக்கு விஷால் பண உதவி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (10:59 IST)
பிரசாந்த் நடிகராக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சி படத்தில் இடம்பெற்ற, தண்ணி குடம் எடுத்து பாடலை எழுதியவர், பாடலாசிரியர் காளிதாசன்.


 


ரஜினி நடித்த அருணாசலம் உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
 
காளிதாசனுக்கு தற்போது 68 வயதாகிறது. உடல்நலம் குன்றிய நிலையில், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குடும்பத்தார் தவித்து வந்தனர்.
 
காளிதாசனின் நிலைகுறித்து அறிந்த விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் 25 ஆயிரம் ரூபாயை காளிதாசனின் மருத்துவச் செலவுகளுக்கு அளிப்பதாக அறிவித்தார். அதன்படி விஷாலின் நற்பணி இயக்கத்தினர் அந்தத் தொகையை காளிதாசனின் மனைவியிடம் வழங்கினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்