மீண்டும் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்?

வியாழன், 20 அக்டோபர் 2016 (11:11 IST)
கபாலி படம் வெளியாவதற்கு முன் ரஜினி அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக செய்தி வெளிவந்தது. தற்போது மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
கபாலி படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும் ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 2 மாதங்கள் தங்கி இருந்தபொழுது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானது. அங்கிருந்த பொழுது வெர்ஜினியாவில் உள்ள சச்சிதானந்தா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய புகைப்படமும் வெளியானது. அப்போது அவர் உடல் நலம் நன்றாக இருப்பதாக, அவருடைய மகள் தெரிவித்தார்.
 
தற்போது 2.0 படத்தில் நடித்து வந்த நிலையில், ரஜினி மீண்டும் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் அங்கு 10 நாட்கள் சிகிச்சை பெற்று பின் மீண்டும் 2.0 படக்குழுவினருடன் இணைவார் எனவும் கூறப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்