விஜய்க்கு அடுத்தது சந்தானம் தான்: பிரபல நிறுவனம் அதிரடி முடிவு

வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (23:30 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தை ஸ்ரீதேனானாள் நிறுவனம் தண்ணீராக செலவு செய்து தயாரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கே கோடிக்கணக்கில் செலவு செய்ததாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் விஜய்யின் 'மெர்சல்' படத்தை அடுத்து இந்த நிறுவனம் சந்தானம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ளார்.
 
இதுகுறித்து தேனாண்டாள் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் கூறியபோது, 'சந்தானம் நடிப்பில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் எங்களுடைய அடுத்த தயாரிப்பு என்பதை பெருமையுடன் கூறிக்கொள்வதாக தெரிவித்தார்.
 
சந்தானத்தை காமெடியனாக வைத்து பல வெற்றி படங்களை மீண்டும் சந்தானத்துடன் இணைந்துள்ளதால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்