பாலா படத்தைவிட்டு, சிவாவின் படத்தில் நடிக்கும் சூர்யா

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (17:19 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் இயக்குனர் சிவாவின் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பட எதற்கும் துணிந்தவன். இப்படத்தை அடுத்து,  சூர்யா பாலா இயக்கத்தில் ‘’வணங்கான்’’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 பல வருடங்களுக்குப் பிறகு பாலா, சூர்யாவுடன் இணைந்துள்ள இப்படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2 வது கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், 2 வது கட்ட ஷூட்டிங் இன்னும் தொடங்கவ்ல்லை. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் சூர்யா பாலாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளி நாடு சுற்றுலா சென்றுவந்த சூர்யா, இந்தியா திரும்பியதும் 'வணங்கான்' படத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, அவர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்