கடந்த 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடத்த படம் கடந்த 8ம் தேதி மீண்டும் 22 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியானது.
ஞாயிற்றுக் கிழமை மதுரை பழங்கானத்தம் பகுதியில் உள்ள APR ஜெயம் திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் ஆடி பட்டாசு வெடித்து கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டு தலைமுறை ரசிகர்களும் கமலஹாசனின் பாடலுக்கு ஆட்டம் அடி கொண்டாடி மகிழ்ந்த வேலையில், ஒரு ரசிகர் வெல்டிங் வைப்பதற்கு பயன்படுத்துவதற்கு உபகரணத்தை கொண்டு தீ பற்ற வைத்து கொண்டாடினர்.
22 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டாலும் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஆளவந்தான் நந்து போல நான் முதன்முதலில் போட்டு நடனமாடிய போது பயன்படுத்தப்பட்ட கண்ணாடி இன்றும் வைத்திருக்கின்றேன் மதுரை ரசிகர்கள் இன்றளவும் மாறவில்லை பாசக்காரர்களாக அதே ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.