பால் வடியுற முகத்துக்கு இப்படி ஒரு கேரக்டரா...? சூப்பர் வைரலாகும் சுனைனாவின் Bloopers வீடியோ...!

செவ்வாய், 5 மே 2020 (13:54 IST)
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி  உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில்  டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திரும்பியுள்ள சுனைனா ஹாரர் த்ரில்லரில் கதைக்களத்தில் உருவான ‘நிலா நிலா ஓடிவா’ என்ற வெப் சீரிஸில் நடித்து புகழ் பெற்றார். இந்த தொடரில் நடித்தது குறித்த அனுபவத்தை Bloopers வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ள சுனைனா அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதைத்தது ‘High Priestess'  என்ற  தெலுங்கு வெப் சீரிஸில் சுனைனா ஒப்பந்தமாகியுள்ளது கூடுதல் தகவல்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#nilanilaodivaa #season1 #bloopers Watch the rest on dir @nandhini_js’s igtv @ashwinkakumanu @nandhini_js died

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்