போனிகபூர் கடன் தொல்லையால் ஸ்ரீதேவி எடுத்த முடிவு: சித்தப்பா அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (06:00 IST)
போனிகபூருக்கு அதிக கடன் தொல்லை இருந்ததால்தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்ததாக அவருடைய சித்தப்பா செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.

போனிகபூரை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, திடீரென ரீஎண்ட்ரி ஆகி 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் புலி, மாம் போன்ற படங்களில் நடிக்க அவரது கணவருக்கு இருந்த கடன் தொல்லையை தீர்க்கவே என்று திருப்பதியில் வசித்து வரும் ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால்ரெட்டி நேற்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும் எப்போதாவது சில நேரங்களில் மட்டும் மது அருந்துவதாக கேள்விப்பட்டுள்ளோம் என்றும் ஆனால் அவர் மது அருந்தியதை இதுவரை நாங்கள் நேரில் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த சில படங்கள் நஷ்டத்தை  ஏற்படுத்தியதால் சென்னையில் இருந்த ஸ்ரீதேவிக்கு சொந்தமான சில சொத்துக்களை விற்கப்பட்டதாகாவும்,  கடன் தொல்லையால் தான் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்தார் என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை திருப்பதி வரும்போது தங்கள் வீட்டிற்கு வந்து செல்லும் பழக்கம் உடைய ஸ்ரீதேவி, ஒருசில ஆண்டுகள் மட்டும் பாதுகாப்பு காரணங்களால் அவர் தங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றும்  ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால்ரெட்டி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்