ப்பபாஹ்! இந்த வயசுலயும் எப்படி ஆடுறாங்க! இன்னும் அதே இளமை துள்ளலோடு சிம்ரன்!

புதன், 27 பிப்ரவரி 2019 (11:34 IST)
தமிழ் சினிமாவில் எந்த ஒருகாலகட்டத்திலும் பிரமிக்கத்தக்க நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதை போல எவ்வளவு வயதானாலும் இளமையான தோற்றத்துடன் தன் நடனத்தால் ரசிகர்களை கிறங்கடிப்பவர் நடிகை சிம்ரன்.


 
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து  கொடிகட்டி பறந்த சிம்ரன் பிறகு  திருமணம் செய்துகொண்டு கணவர் குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்டார். கல்யாணத்திற்கு பிறகு சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் விட்ட சிம்ரன் ஆஹா கல்யாண் என்ற படத்தின் மூலம்  ரீஎன்ட்ரி கொடுத்தார். 
 
சிம்ரன் பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தாலும் வாடி ராசாத்தி உன்ன மிஞ்ச இன்னொருத்தி பொறந்து வரல என்கிற அளவிற்கு இன்ற காலகட்டத்தில் சினிமாவில் எத்தனை நடிகை வந்தாலும் சிம்ரனை அடித்துக்கொள்ள ஆளேயில்லை என்று தான் தோன்றுகிறது.


 
அந்தவகையில் சமீபத்தில் நடந்த பிரபல விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகை சிம்ரன் அந்த நிகஸ்க்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் தன் நடனத்தால் கவர்ந்திழுத்தார்.  அந்நிகழ்ச்சியில்  இவர் ஆடிய டான்ஸின் தொகுப்பு வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது . 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்