கொலை மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - ஷகிலா ஆவேசம்

சனி, 28 பிப்ரவரி 2015 (09:17 IST)
தனது சொந்தக் கதையை ரொமான்டிக் டார்கெட் என்ற பெயரில் தெலுங்கில் படமாக்கி வருகிறார் ஷகிலா. படத்தின் கதையை எழுதி அவரே இயக்கியும் வருகிறார்.
 
இந்தப் படத்தில் தன்னை கவர்ச்சி நடிகையாக்கியவர்களையும், தன்னிடம் பழக்கம் வைத்துக் கொண்ட பிரபலங்களையும் தோலுரித்து காட்டியிருக்கிறாராம். அதன் காரணமாக ஷகிலாவுக்கு போனில் கொலை மிரட்டல்கள் வருகின்றன.
 
ஹைதராபாத்தில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஷகிலா, இந்த கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்றார். ரொமான்டிக் டார்கெட்டில் நரேஷ், ஸ்வேதா சைனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்