25 கோடி கடனா?... சர்ச்சைகளுக்கு சமந்தா பதில்!

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:04 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

இதற்கிடையில் தெலுங்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் ‘சமந்தா பிரபல நடிகர் ஒருவரிடம் 25 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளதாக’ தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அந்த ஊடகம் தெரிவிக்கவில்லை. மையோசிட்டீஸ் எனும் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அந்த சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை கடனாக பெற்றுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அது குறித்து இப்போது சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அதில் “மையோசிட்டீஸ் சிகிச்சைக்கு 25 கோடியா? தவறான தகவலை நீங்கள் பெற்றுள்ளீர்கள். சிறிய தொகையை சிகிச்சைக்காக செலவு செய்வதில் மகிழ்ச்சியே. சினிமாவில் நான் தேவையான அளவு சம்பாதித்துள்ளேன். அதன் மூலமே என்னுடைய சிகிச்சையை செய்துகொள்ள முடியும். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்