திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்கவில்லை. நஸ்ரியா தற்போது கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. நஸ்ரியா தனது கணவருடன் கொச்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று வந்துள்ளார். பஹத் மற்றும் நஸ்ரியாவின் குடும்பத்தார் கடந்த வாரம் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளனர். பஹத் பட விழாக்களுக்கு வராததற்கு பர்சனல் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நஸ்ரியா கர்ப்பம் என்று வலைதளங்களில் பேசப்படுகிறது.