குஜராத்தில் பிறந்த நடிகை நமிதா, சொந்தம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும், எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் திரையிலும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்த நமீதா, தன் ரசிகர்களைப் பார்த்து ‘மச்சான்ஸ்’ என அழைத்து பிரபலமானவர். அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தமிழில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அவரின் திருமணம் செய்தி வெளியானது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நமிதா நாளை திருமண பந்தத்தில் இணைய உள்ளார். திருமணத்திற்காக நமிதா தயாராகி வரும், புகைப்படங்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.