நடிகை மும்தாஜ் வீட்டில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அக்கா தங்கை ஆகிய இரண்டு இளம்பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தனக்கு அதிகமாக வேலை கொடுப்பதாகவும் தனக்கு இங்கே பணி புரிய விருப்பம் இல்லை என்றும் தன்னை தன்னுடைய ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும் புகார் அளித்துள்ளார் .
இந்த புகார் குறித்து விசாரணை செய்த நிலையில் மும்தாஜ் வீட்டில் பணிபுரியும் அக்கா தங்கைகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ஒரு ஒரு பணிப்பெண் மட்டும் ஊருக்கு திரும்ப விரும்பியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து பணிப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்த போலீசார் உடனடியாக சென்னை வந்து பணிப்பெண்ணை அழைத்து செல்லும்படி அறிவுறுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.