எத்தனை கோடி கொடுத்தாலும் அஜீத் இதை செய்யமாட்டார். நடிகை கஸ்தூரி

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (06:59 IST)
முன்னாள் நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களாக நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் டார்ச்சர் குறித்தும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அஜித் குறித்து அவர் கூறிய ஒரு கருத்து வைரலாகி வருகிறது

 

 




பொதுவாக நடிகர், நடிகைகள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாகவும், பார்ட்டிகளுக்கு செல்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் அஜித் எத்தனை கோடி கொடுத்தாலும் மது அருந்த மாட்டார். அவர் சினிமாவில் குடிக்கும் மது கூட உண்மையான மது கிடையாது' என்று கூறியுள்ளார்.

மேலும் தல அஜித் எத்தனை கோடிகள் பணம் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்கமாட்டார். அதே போல் நடிகர் லாரன்ஸூம் நல்ல குணமுடையவர் என்றும் கஸ்தூரி புகழந்து தள்ளியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்