நடிகை கோபிகாவுக்கு ஆண் குழந்தை

வியாழன், 30 அக்டோபர் 2014 (10:53 IST)
நடிகை கோபிகா வெளிநாட்டில் மருத்துவராக இருக்கும் அகிலேஸை திருமணம் செய்து செட்டிலானார். அவருக்கு நான்கு வயதில் எமி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கோபிகா மீண்டும் கர்ப்பமானார்.
 
அவருக்கு நேற்று காலை பத்து மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரும், குழந்தையும் நலமாக இருப்பதாக கோபிகா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த கோபிகா திருமணத்துக்கு முன் ஜெயராமுடன் நடித்த, வெறுதே ஒரு பார்யா என்ற படத்தின் இரண்டாம் பாகமான பார்யா அத்ர போரா என்ற படத்தில் மட்டும் நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்