‘அழகன்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் உறவினரான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி, நிறைய ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் அறிமுகமான ‘ரோஜா’ படத்தில், மதுபாலா தான் ஹீரோயின். அந்தப் படமும், ஷங்கர் இயக்கிய ‘ஜெண்டில்மேன்’ படமும் மதுபாலாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.
‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே’ பாட்டுக்கு ஆடிய போதுதான் தமிழ் ரசிகர்கள் கடைசியாகப் பார்த்தது. அதன்பின்னர், 2014ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். ஆனால், பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் மறுபடியும் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் மதுபாலா. ‘ரோஜா’ படம் வெளியாகி அடுத்த மாதத்துடன் 25 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.