பிரபலங்கள் இதுபோல பொதுவெளியில் நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் உடனே வைரலாகி விடுகிறது. என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களதானே?. அவர்களுக்கும் கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள உண்டுதானே?. பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் பிரபலங்கள் அனைவரும் நாம் திரையில் பார்ப்பது போல எந்நேரமும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.
சிவக்குமார் விஷயம் இன்று வைரலாகிக் கொண்டிருக்க இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மகன் நடிகர் சூர்யா இதே போல ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணாசாலையில் உள்ள் ஒரு மேம்பாலத்தில் ஒரு விலையுயர்ந்த கார், ஒரு இளைஞனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சிறு விபத்தானது. அவர்கள் இருவரும் அது சம்மந்தமாக பேசி சமாதானம் செய்துகொண்டிருக்கும் போது அந்த வழியாக காரில் சென்ற நடிகர் சூர்யா அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என தவறாகப் புரிந்து கொண்டு எதுவும் விசாரிக்கமல் அந்த இளைஞனை அறைந்து விட்டார். பின்பு விஷயம் தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு வேகமாகக் கிளம்பி சென்றார்.